Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேனீ மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை - ஆட்சியர் ஆய்வு

ஜனவரி 08, 2021 12:46

தேனி : கானா விளக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல் கட்டமாக தேனி மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொரோனா தடுப்பு ஊசி ஒத்திகை மையங்களை  திறந்து வைத்து ஆய்வு செய்தார்.

நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெற்று வருகிறது.  தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் கொரோனா தடுப்பு ஊசி ஒத்திகைக்காக 5 தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த மையத்தில் முதல்முறையாக ஒவ்வொரு மையங்களிலும் 25 நபர்களுக்கு மட்டும் ஒத்திகை தடுப்பூசி பணி நடைபெற்றது.  மருத்துவர் செவிலியர்கள் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவ கள  பணியாளர்கள்  என 125 பேர் பேருக்கு இன்று ஒத்திகை தடுப்பூசி பணி துவங்கி நடைபெற்றது.

கடந்த 2ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் 17 இடங்களில் ஒத்திகை தடுப்பூசி  100% வெற்றி என சுகாதாரத் துறை அறிவித்தது. அதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று இரண்டாம் கட்ட கொரோனா ஒத்திகை தடுப்பூசி துவங்கி உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கூறும்போது... தேனி மாவட்டத்தில் ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஐந்து இடங்களிலும் தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெற்றது வருகிறது.  தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,  என்.ஆர்.டி தனியார் மருத்துவமனை  மாவட்ட ஒருங்கிணைந்த மருத்துவமனை தேனி, பொம்மையன்கவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம்,

வீரபாண்டி அரசு மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் ஒவ்வொரு மையத்திற்கும் 25 நபர்கள் வீதம் மொத்தம் 125 நபர்களுக்கு இந்த ஒத்திகை நடைபெற்றது என தெரிவித்தார்.  இந்த ஒத்திகையில் முதலில் பதிவு செய்த நபர்கள் பெயர் மற்றும் அடையாள அட்டைகள் இதற்காக தனியாக தொடங்கப்பட்டுள்ள மென்பொருளில் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு இவருக்கு தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்யப்பட்டும்.

அதன் பின்பு மருத்துவர்களின்  நோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு அரை மணி நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் மருத்துவரின் ஆலோசனைப்படி அவர்கள் கண்காணிக்க படுவார்கள்.  இன்று அவர்களுக்கு தடுப்பு மருந்து அளிக்கப்படாது என்றும்  ஒத்திகை மட்டுமே நடைபெற்று வருகிறது என்றும்  மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

தலைப்புச்செய்திகள்