Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பணி முடிந்து 12 ஆண்டுகள் ஆன கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

ஜனவரி 08, 2021 12:48

காஞ்சிபுரம் :  தமிழகத்தில் திருப்பணி முடிந்து 12 ஆண்டுகள் ஆன அனைத்து கோவில்களும் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை  இந்து அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது... கோவில்களில் பணிகள் சிறப்பாக நடக்கவும் கோவில் புனரமைப்பு பணிகள் விரைந்து முடிப்பதற்காகவும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமியின் உத்தரவுப்படி புதியதாக 9 இணை ஆணையர் அலுவலகங்கள் தோற்றுவிக்கப்பட்டது. அதில் ஒன்றான காஞ்சிபுரத்தில் அலுவலகத்தை திறந்து வைத்து இருக்கிறேன்.

இதுவரை இரண்டு  மண்டலங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது மீதமுள்ள ஏழு மண்டலங்களில் அலுவலகங்கள் விரைவாக திறந்து வைக்கப்படும் என தெரிவித்தார்.மேலும், தமிழகத்தில் உள்ள திருப்பணி முடிந்து 12 ஆண்டுகள் ஆன  அனைத்து கோவிலையும் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியின்போது காஞ்சிபுரம்   மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், காஞ்சிபுரம் அதிமுக மாவட்டச் செயலாளர் வி. சோமசுந்தரம், உத்திரமேரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா. கணேசன்  உள்ளிட்ட ஏராளமான அரசு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்