Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முகநூல் வழியே திறமையை வெளிப்படுத்திய இளைஞர் - பாராட்டி பரிசு வழங்கிய ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் 

ஜனவரி 09, 2021 09:38

திண்டுக்கல் : முகநூல் வழியாக பாடல் திறமையை வெளிக்காட்டி வந்த இளைஞருக்கு ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பகுதியைச் சேர்ந்த இளைஞர் சடையப்ப ராகுல் என்பவர் முகநூல் வழியாக பாடல்களைப் பாடியும், இசை அமைத்தும் தனது தனத்திறமையை  வெளிப்படுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களை பொழுதுபோக்கிற்காகவும், குற்றம் செய்யவும் பயன்படுத்தி வரும் பல்வேறு இளைஞர்களுக்கு மத்தியில், முக நூல் வழியாக தன் திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்.  இதனை பாராட்டி ஊக்கப்படுத்தும் நோக்கில் காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் அவர்கள் சடையப்ப ராகுலை  நேரில் அழைத்து சந்தன மாலை அணிவித்து மைக் ஒன்றினைப்  பரிசாக வழங்கி பாராட்டினார்.  

இளைஞர் ராகுல் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்துவிட்டு, சிறந்த பாடகராக வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டு முயற்சி செய்துவருகிறார்  என்பதும், ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை இளைஞர்களின் திறமைகளை ஊக்கப்படுத்துவதன் மூலம் தன்னம்பிக்கையும் இளைஞர்கள் தனது இலட்சியத்தை  அடைய போராடுவது மட்டுமன்றி, தவறான பாதைகளில் வழிதவறிச் செல்வதை தடுத்து, சாதனையாளர்களாக உருவாக்க முடியும் என்று வாழ்த்தினார். தன்னை பாராட்டிய காவல்துணை   கண்காணிப்பாளர்களுக்கு ராகுல் மனமார நன்றியைத் தெரிவித்தார்.

தொடர்ந்து இளைஞர்களை நல்வழிப்படுத்திடும் முயற்சியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு தமிழக இளைஞர் பாராளுமன்றம் சார்பில் பால் தாமஸ் நன்றி கூறி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்