Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்பாசமுத்திரத்தில், பண்ணை இயந்திரங்கள் கண்காட்சி ஆட்சித்தலைவர் விஷ்ணு திறந்து வைத்தார் 

ஜனவரி 09, 2021 10:49

திருநெல்வேலி: அம்பாசமுத்திரத்தில், பண்ணை இயந்திரங்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு திறந்து வைத்து பார்வையிட்டார்.

மத்திய, மாநில அரசுகளின், முன்னோடி திட்டமான கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், பண்ணை இயந்திரங்கள் கண்காட்சி நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு இந்த கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டு, கண்காட்சி அமைப்பாளர்களை பாராட்டினார்.  மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, தம்முடைய வருகையின் நினைவாக, கண்காட்சி வளாகத்தில், பலன் தரும் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.

தொடர்ந்து, உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவியினை, கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் கீழ், தமிழக அரசு சார்பில், வழங்கினார். விவசாயிகளுக்கு மானியவிலையில், பண்ணை பொருட்களையும், மாவட்ட ஆட்சித் தலைவர்  வழங்கினார். 

ஏற்கனவே, வழங்கப்பட்டுள்ள, பண்ணை  கருவிகளின் செயல்பாடுகள் குறித்து, விவசாயிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நடைபெற்ற, உழவர் உற்பத்தியாளர் குழு  கருத்தரங்கில் பேசிய, மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, விவசாயிகள் தங்களுடைய  வாழ்வில், முன்னேற்றம் காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் டேவிட் டென்னிசன், மத்திய அரசு திட்டங்களுக்கான வேளாண் துணை இயக்குநர் சுந்தர்டேனியல், அம்பாசமுத்திரம் வேளாண்  உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி, வேளாண் அலுவலர் மாசானம், துணை அலுவலர் முருகன், உதவி அலுவலர்கள் மோகன், மாரியப்பன்,சாந்தி, அமுதா,விஜயலட்சுமி, பார்த்தீபன்,காசிராஜன், அட்மா அலுவலர்கள் நீலவேணி மற்றும் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்