Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் - நெல்லையில் வீடு வீடாக ஆய்வு 

ஜனவரி 09, 2021 11:49

திருநெல்வேலி : புதுப்பேட்டையில் வீடு வீடாகச் சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் ஜி.கண்ணன் உத்தரவின் பேரிலும், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.எஸ் சரோஜா அறிவுறுத்தலின் பேரிலும்,  மாநகராட்சி பகுதிகள்,  முழுவதிலும்,  டெங்கு காய்ச்சல்  தடுப்புப் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட, புதுப்பேட்டை 45- ஆவது வார்டு பகுதிகளான,  ராம் நகர், செல்வ விநாயகர் கோவில் தெரு, ஆண்டாள்புரம், வள்ளுவர் தெரு, அரசடி விநாயகர் கோவில் தெரு, சேரன்மகாதேவி ரோடு ஆகிய  இடங்களில், புதுப்பேட்டை   சுகாதார அலுவலர் முருகேசன் தலைமையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 

 இதில் சுகாதார ஆய்வாளர் அந்தோணி முன்னிலையில், சுகாதார மேற்பார்வையாளர்கள்  முத்தையா மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் வேல்முருகன், பேச்சியம்மாள்,  இப்ராகிம், டெங்கு ஒழிப்புப் பணியாளர்கள் சரவணகுமார், சந்தனகுமார், முத்து மாரியப்பன் ஆகியோர்   டெங்கு தடுப்புப் பணியாளர்களுடன்,  வீடு வீடாகச் சென்று, நேரில் பார்வையிட்டு,  ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகள், பூந்தொட்டிகள், குளிர் சாதன பெட்டிகள் போன்றவற்றில், லார்வா கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதை ஆய்வு 
செய்தனர். லார்வா கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்ட, தரைமட்ட குடிநீர் தொட்டியிலும், மழைநீர் தேங்கி நின்ற இடங்களிலும், கொசுக்களை அழிக்கக்கூடிய, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன. 

அத்துடன்,  கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் பொருட்களான, சிரட்டைகள்,  தண்ணீர் பாட்டில்கள், வாகன டயர்கள், தேங்காய் நார்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும், 
உடனடியாக  அப்புறப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு வீட்டிலும்,  கொசு மருந்து தெளிக்கப்பட்டது. வீடு வீடாக, டெங்கு காய்ச்சல் தொடர்பான  விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள்  விநியோகிக்கப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில்,  அனைத்து  மக்களுக்கும், கபசுர மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்