Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கன்னியாகுமரியில் பயங்கர தீ விபத்து - பொருட்கள் சேதம் 

ஜனவரி 09, 2021 11:50

கன்னியாகுமாரி : கடற்கரை காந்தி மண்டபம் அருகில் உள்ள  கடைகளில் அதிகாலை நேரத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 70 - ககும் மேற்பட்ட கடைகள் தீ பற்றி எரிந்து சாம்பலானது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அலங்கார பொருட்கள், பேன்சி பொருட்கள், நறுமண பொருள்கள் வைக்கப்பட்டுள்ள 500 - க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்நிலையில்  கடற்கரை காந்தி மண்டபம் அருகில் உள்ள கடைகளில் அதிகாலை நேரத்தில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது. இதில்  சுமார் 70 - ககும் மேற்பட்ட கடைகள் தீ பற்றி எரிந்தது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.  நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதியில் இருந்து  தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, தீயணைப்பு  வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து  கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து வியாபாரிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்