Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொங்கலையொட்டி ஆடுகள் விற்பனை களை காட்டியது கிருஷ்ணகிரி மாவட்ட வார சந்தைகளில் குவிந்த வியாபாரிகள் 

ஜனவரி 09, 2021 11:54

கிருஷ்ணகிரி : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  வார சந்தைகளில், சுமார் மூன்று கோடிக்கு ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானது.
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான பொங்கல் பண்டிகை வருகின்ற 14-ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடுகளின்  விற்பனை தீவிரமடைந்துள்ளது.

இதில் கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி, ஒரப்பம், போச்சம்பள்ளி என மாவட்டத்தின் பல்வேறு வாரச்சந்தைகளில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ஆட்டுச்சந்தை கூடியது. இந்த ஆட்டு சந்தைகளில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் ஆயிரக்கணக்கான வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆடுகள் நல்ல தரமாகவும், அதிக சுவையாகவும் இருப்பதால், ஆடுகளை வாங்குவதற்காக கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை,  ஈரோடு, கோவை,  சேலம், மதுரை மட்டுமின்றி ஆந்திர, கர்நாடக, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்க லாரிகள் மூலமாக குவிந்தனர்.  

ஒவ்வொரு ஆடுகளும்  6 ஆயிரம்  முதல் 22 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன.  பொங்கல் பண்டிகையையொட்டி விலை அதிகமாக இருந்தாலும் வியபாரிகளும் பொதுமக்களும் ஆடுகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இது குறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறும்போது...

 பொங்கல் பண்டிகைக்காக ஆடுகள் வாங்க வந்ததாகவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆடுகள் மிகவும் சுவையாக  இருப்பதாகவும், ஆடுகள் 6 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை  விற்பனை செய்யப்பட்டாலும் நல்ல லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிக விலை கொடுத்து ஆடுகளை வாங்கிச்  செல்வதாகவும் வியபாரிகள் குறிப்பிட்டனர். பொங்கல் பண்டிகையை யொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 3 ரூபாய்க்கு கோடிக்கு மேல் வர்தகம் நடைபெற்று இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்