Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொங்கல் பரிசு,கோவிட் 19,கொரோனா நிதி, ரேஷன் பொருள்கள், இலவச வேஷ்டி,சேலை திருட்டு

ஜனவரி 10, 2021 09:30

தென்காசி : திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் உட்பட்ட அ. கரிசல்குளம் கிராமம்,ஆலடிப்படி குக்கிராமத்தில் வசிக்கும் ஏழை பெண்மணி இராமலட்சுமி வயது 80 ஆவார்.  ராமலட்சுமி கணவர் சுப்ரமணியன் இறந்தவுடன் குடும்ப அட்டையை (ஒரு நபர் கார்டு)திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் மனுவுடன் ஒப்படைத்து விட்டார். 

மனு நகல் வைத்திருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் 1000 ரூபாய் OAP பென்ஷன் வாங்கிறார்.OAP இலவச அரிசி மஞ்சள் அட்டை கேட்டு வட்ட வழங்கல் குடிமைப் பொருள் 
அலுவலரிடம் பல முறை மனுச் செய்தும் இன்று வரை கிடைக்கவில்லை. சர்க்கரை நோயாளியும்,உயர் இரத்த அழுத்தம் உள்ள ராமலட்சுமியால் குடிமை பொருள் அலுவலகத்தில் தொடர் போராட்டம் நடத்த முடியவில்லை. 

ஒப்படைத்த குடும்ப அட்டை 29/G/074 3991 -ஐ சம்பந்தப்பட்ட துறை அலுவலர் உதவியுடன் மீண்டும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு பொருள் வாங்க ரேஷன் கடை விற்பனையாளர் மூலம் அனுப்பப்பட்டது. 12.06.2016 ல் ஒப்படைத்த குடும்ப அட்டைக்கு 30.12.2020 தேதி வரை பழைய பொங்கல் பரிசு,கோவிட் 19,கொரோனா அரசு நிதி,ரேஷன் பொருள்கள்,வேஷ்டி சேலைகள் இலவசமாக  வழங்கப்படுவதாக தகவல் கிடைத்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தை விசாரித்தால் குடும்ப அட்டையை ஒப்படைத்து விட்டீர்கள்.

நீங்கள் வீட்டுக்கு போகலாம்.நாங்கள் பார்த்து  கொள்கிறோம் என கூறுகிறார்கள். புகார் கடிதம் கொடுத்தோம் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  ரேஷன் திருட்டை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? அந்த பகுதி சமூக ஆர்வலர்களும்,பொது மக்களும் எதிர் பார்த்து தனது ரேஷன் கார்டுகளை சரிபார்க்க சுதாரித்துக்  கொள்கிறார்கள் என நமது நிருபர் கூறுகிறார்.இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்