Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் போராடிய மற்றொரு விவசாயி தற்கொலை  

ஜனவரி 10, 2021 10:47

புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிய 40 வயது விவசாயி நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
மத்திய அரசுடன் நேற்று எட்டாம் கட்டப் பேச்சுவார்த்தையிலும் பலனில்லாமல் போன செய்தி போராட்ட எல்லைகளுக்கு எட்டியது. இதையடுத்து, போராட்ட மேடைகளில் விவசாயிகள் ஆக்ரோஷத்துடன் கோஷம் எழுப்பினர்.

இவர்களில் ஒருவராக பஞ்சாப்பின் பத்தேஹாபாத் சாஹேப்பைச் சேர்ந்த அம்ரேந்தர் சிங் இடம் பெற்றிருந்தார். இவர் கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் இணைந்தார். கோஷங்களுக்கு இடையே திடீர் என மேடையின் பின்பகுதிக்குச் சென்ற அம்ரேந்தர் சிங், திடீரென முடிவு எடுத்து, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

போராட்டக் களத்தில் இதை சற்றுத் தாமதமாகக் கண்ட சக விவசாயிகள், அம்ரேந்தரை அருகிலுள்ள சோனிபத்தின் பேமஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அம்ரேந்தர் பரிதாபமாக மாலை 7.15 மணிக்கு உயிரிழந்தார். இறப்பதற்கு முன் அவர் உடனிருந்த விவசாயிகளிடம், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை எனக் கவலையுடன் பேசியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்