Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பண்டிகையையொட்டி,  இரவில் கூடுதல் நேரம் கடைகளை, திறக்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை 

ஜனவரி 10, 2021 12:35

திருநெல்வேலி : பொங்கல் பண்டிகையையொட்டி,  இரவில் கூடுதல் நேரம் கடைகளை, திறந்து வைத்து, வியாபாரம்  செய்வதற்கு, வியாபாரிகளுக்கு, மாவட்ட நிர்வாகம்,  அனுமதி அளித்திட வேண்டி  எஸ்.டி.பி.ஐ. புறநகர்  மாவட்ட, செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் செய்தனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின்,  புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம், நெல்லை மாநகராட்சி, மேலப்பாளையத்தில் உள்ள, கட்சியின்  மாவட்ட அலுவலகத்தில்  நடைபெற்றது. புறநகர் மாவட்டத்  தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச்செயலாளர் களந்தை மீராசா, அனைவரையும் வரவேற்றும் பேசினார்.

 இந்தக் கூட்டத்தின் போது, புறநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட,  அம்பாசமுத்திரம், நாங்குநேரி மற்றும் ராதாபுரம்  சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல்பிரச்சாரத்தின் போதும்,  வாக்குப்பதிவின் போதும், பின்பற்றப்பட வேண்டிய முக்கிய நடைமுறைகள் குறித்து, அந்தந்த தொகுதிகளின்  பூத் ஏஜெண்டுகளுடன்,   ஆலோசனை நடத்தப்பட்டது.   

அதனைத் தொடர்ந்து,மாவட்டம் முழுவதும், சாலைகளில் சுற்றித்திரியும், மாடுகளைப் பிடிப்பதற்கு, உள்ளாட்சி நிர்வாகங்கள்,உரிய  நடவடிக்கைகளை எடுத்து, மாடுகளால் ஏற்படும்  விபத்துக்களைத்  தடுத்திட வேண்டும். தமிழர் திருநாளாம், பொங்கல் பண்டிகையையொட்டி, மாவட்டம் முழுவதிலும், இரவில் கூடுதல் நேரம் கடைகளை திறந்து வைத்து, வியாபாரம் செய்வதற்கு,  வியாபாரிகளுக்கு,  மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திட வேண்டும்,  ஆகிய இரண்டு தீர்மானங்கள்,  இந்த செயற்குழுக் கூட்டத்தில், ஒருமனதாக   நிறைவேற்றப்பட்டன. 

மாவட்டப்பொருளாளர் எம்.எஸ். உவைஸ், மாவட்ட மகளிர் அணித் தலைவி மும்தாஜ் ஆலிமா மற்றும் கட்சியின்  தொகுதி நிர்வாகிகள் என, பலரும், இக்கூட்டத்தில், பங்கேற்று இருந்தனர்.  கூட்ட முடிவில்,  மாவட்டச் செயலாளர் சுலைமான் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்