Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மினி மாரத்தான் போட்டி - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடக்கி வைத்தாா்

ஜனவரி 10, 2021 12:45

காஞ்சிபுரம் : சுங்குவார்சத்திரம் காவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முக பிரியா கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

தமிழகமெங்கும் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில் மராத்தான் பந்தயம் ,கலவரங்களை அடக்கும் ஒத்திகை பயிற்சி போன்ற பலவிதமான நிகழ்வுகளை செய்து வருகின்றனர்.  இதன்மூலம் காவல்துறைக்கும் மக்களுக்கும் இணக்கமான சூழ்நிலை உருவாகும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது. 

அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நல்லுறவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த மராத்தான் ஓட்டம் தேசிய நெடுஞ்சாலை வழியாக மதுரமங்கலம் வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சென்றடைந்தது. இதில், போலீசார், இளைஞர்கள், தன்னார்வலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கலந்து கொண்டு ஓடினர். 

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மெடல் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, காவல் கண்காணிப்பாளர் வழங்கினார். இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வுக்கு, காஞ்சிபுரம் எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா, ஸ்ரீபெரும்புதூா் ஏஎஸ்பி எஸ்.காா்த்திகேயன், காஞ்சிபுரம் டிஎஸ்பி எஸ்.மணிமேகலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்வில் காவல் துறை அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

தலைப்புச்செய்திகள்