Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணிமுத்தாறு அணையில் இருந்து உபரிநீர் திறப்பு

ஜனவரி 10, 2021 12:46

திருநெல்வேலி : பாபனாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து  விடப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து வருகிறது. அய்யப்ப பக்தர்கள் உட்பட, மற்றவர்களும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த நான்கைந்து தினங்களாக பெய்து வரும், இடைவிடாத சாரல்மழையினால்,  மாவட்டத்தின் முக்கிய அணைகளான பாபனாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகள் நிரம்பி வழிகின்றன. 
அதன் காரணமாக, இந்த அணைகளில் இருந்து, உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால், தற்பொழுது தாமிரபரணி ஆற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இது இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால், எந்தப்பகுதியிலும்,  அய்யப்ப பக்தர்கள் உட்பட, யாரையும் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கு, மாவட்டம் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.  ஆற்றுக்கு குளிக்க வந்த அனைவரையும் உடனடியாக கரையேறுமாறு, அந்தந்த பகுதியில் உள்ள, தாசில்தார்கள் ஆற்றங்கரைகளுக்குச் சென்று, அறிவுறுத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி கொக்கிரகுளம், தாமிரபரணி ஆற்றுப்பகுதியில்,  பாளையங்கோட்டை தாசில்தார் செல்வன், இந்தப் பணியில், ஈடுபட்டு  வருகிறார். மாவட்டம் முழுவதிலும்,  தாமிரபரணி நதிக்கரைகளில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்