Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நண்பர்கள் கூடும் விழா திருச்சியில் நடைபெற்றது

ஜனவரி 10, 2021 12:47

திருச்சி : புத்தூர் பிஷப்  பள்ளியில் 1986ஆம் ஆண்டு நண்பர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி ஒரு காலத்தில் தங்களால் முடிந்த ஏழை மக்களுக்கு உதவி செய்தார்கள். தற்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய நண்பர்கள் அனைவரும் இணைந்து நண்பர்களோடு புகைப்படத்தோடு காலண்டர் ஒன்றை வெளியிட்டார்கள்.

அந்தக் கூட்டத்தில் இனி  வருங்காலத்தில் நம்முடைய நண்பர்கள் குடும்பங்களில் ஏதும் அகால மரணம் அடைந்தால், அவர்களது குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி உதவி வேலைவாய்ப்பு இதை நாம்  பெற்றுத்தர ஒரு வழிகாட்டு அமைப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த கூட்டத்தின் அமைப்பாளராக குமார் அவர்களும் சிஜி அவர்களும் இணைந்து இந்த அமைப்பை தொடங்கி இருக்கிறார்கள்.

மேலும் வருங்காலத்தில் அறம் மக்கள் நல சங்கம் இணைந்து தங்களுடைய பணிகளை தன்னார்வ தொண்டு நெறிகலை தொடங்கு செய்வதென அனைவரும் ஏகமனதாக முடிவெடுத்தனர். இன்னும் உலகெங்கிலுமுள்ள  தமது பள்ளி தோழர்களை நட்பு வட்டத்தில் சேர்ப்பது என முடிவெடுத்தனர் இந்த நாளில் நம்முடைய நண்பர்கள் இறந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி நடத்தப்பட்டது.

தலைப்புச்செய்திகள்