Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயிலை சூழ்ந்த வெள்ளம் 

ஜனவரி 11, 2021 06:20

நெல்லை: பாபநாசம், மணிமுத்தாறு அணை களில் இருந்து நேற்று காலையில் விநாடிக்கு 3,815 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணியில் வெள்ளம் கரை புரள்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் மழை நீடிக்கிறது. நேற்று காலை 8 மணிநிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 29, சேர்வலாறு- 15, மணிமுத்தாறு- 41.6, கொடு முடியாறு- 10, அம்பாசமுத்திரம்- 32, சேரன்மகாதேவி- 22, நாங்குநேரி- 7.5, ராதாபுரம்- 9.4, களக்காடு- 14, மூலக்கரைப்பட்டி- 15, பாளையங்கோட்டை- 25, திருநெல்வேலி- 16. பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியதால் அணைக்கு வரும் தண்ணீர் உபரியாக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. பாபநாசம் அணையிலிருந்து விநாடிக்கு 2,451 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 1,364 கனஅடி என மொத்தம் 3,815 கனஅடி தண்ணீர் நேற்று காலையில் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரள்கிறது. 

திருநெல்வேலி குறுக்குத்துறையில் முருகன் கோயிலை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 142 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,759.92 கனஅடி தண்ணீர் வந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 117.50 அடியாக இருந்தது. அணைக்கு 1,491 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மற்ற அணைகளின் நீர்மட்டம் விவரம்: சேர்வலாறு- 141.04 அடி, வடக்கு பச்சையாறு- 31 அடி, நம்பியாறு- 10.62 அடி, கொடுமுடியாறு- 27 அடி.

தலைப்புச்செய்திகள்