Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததில் ஒருவர் எரிந்து சாம்பல்

ஜனவரி 12, 2021 11:52

கடலூர் : விருத்தாச்சலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து இருந்ததில் காரின் உள்ளேயே ஒருவர் எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சேலம் புறவழிச்சாலையில்  சேலத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி ஹூண்டாய் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது விருத்தாசலம் மேல காலனி  அருகே கார் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. காரின் ஓட்டுனர் காரின் வேகத்தை குறைத்து நிறுத்த முயற்சித்து காரைவிட்டு இறங்குவதற்குள் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய துவங்கியுள்ளது.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீர் மூலம அணைக்க முயன்றும் முடியாமல்போனது. மேலும் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் வருவதற்குள் கார் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. இதில் காரை ஓட்டி வந்த ஓட்டுனர் காரின் இருக்கையில் அமர்ந்தபடியே உடல் முழுவதும் எரிந்து சாம்பலான நிலையில் உள்ளார்.

காரை ஒருவர் மட்டுமே  ஓட்டி வந்துள்ளதாகவும் அவர் யார் என்ற விபரம் இதுவரை தெரியவும் இல்லை. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விருதாச்சலம் வட்டாட்சியர்  சிவக்குமார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

நடுரோட்டில் சாலையில் வந்து கொண்டிருந்த கார் எரிந்து சாம்பலான தோடு காரின் ஓட்டுநரும் காருக்குள்ளேயே சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்