Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்

ஜனவரி 12, 2021 11:56

தூத்துக்குடி :  விளாத்திகுளம் தாலுகா ஆற்றங்கரை பஞ்சாயத்திற்கு  உட்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்து 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட மானாவாரி பயிர்கள் மழையினால் அழுகி

சேதமடைந்ததால் அரசு நிவாரணம் வழங்க கோரி அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா ஆற்றங்கரை பஞ்சாயத்துக்குட்பட்ட துரைச்சாமிபுரம் சொக்கலிங்கபுரம் கந்தசாமி புரம் தொப்பம்பட்டி ஆற்றங்கரை உள்ளிட்ட  கிராமங்களில் சுமார் ஆயிரத்து 500 ஏக்கரில் விவசாயிகள் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு உள்ளனர் .

இந்நிலையில் தொடர்மழை காரணமாக அந்த  பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மானாவாரி பயிர்கள்அழுகி சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடைந்துள்ளனர். ஏற்கனவே நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்த தங்களுக்கு மழையினால் பயிர்களும் சேதம்  அடைந்து  தங்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை   நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும் என   வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அழுகிய பயிர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைப்புச்செய்திகள்