Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விதை நெல்லுக்கு வழியில்லை-விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை

ஜனவரி 12, 2021 11:57

ராமநாதபுரம் : விதை நெல்லுக்கு வழியில்லை மழை நீரில் நெல் விவசாயம் பாதிப்பு என விவசாயிகள் ஆட்சியரிடம் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பெய்த கன மழையால் மாவட்டம் முழுவதும் ஆறு,குளம், கிணறுகளில் நீர் நிரம்பியது.

இதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக பெய்த  கனமழையால் இந்த ஆண்டு விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்தது. நெற்கதிர்கள் விளைந்து பொங்கலுக்கு அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மணிகள் மழையால் நீரில் மூழ்கி அழுகியது.

இதனால் ராமநாதபுரம் அருகே உள்ள நயினார்கோவில் அஞ்சா மடை காச்சான்,  காடரந்தகுடி, அக்கிரமேசி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்தது. இதனால்

அப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தலைவர்களை சந்தித்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் வீட்டிலிருந்த நெல் முழுவதும் வயலில் விதைத்து விதை நெல்லுக்கு வழியில்லாமல் இருக்கிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு தொகை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

தலைப்புச்செய்திகள்