Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஜனவரி 12, 2021 11:59

ராமநாதபுரம் : குடியிருப்பு பகுதிக்குள் எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் பதாகைகளை ஏந்தி வந்து கோரிக்கை விடுத்தனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட வழுதூர் அருளொளி நகர், தெற்கு காட்டூர், முத்துமாரியம்மன் நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்கள்  எரிவாயு குழாய் பணிகளை குடியிருப்பு பகுதிக்குள் புதைப்பதை  கண்டித்து அப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ்  பொன்ராஜ் ஆலிவர் அவர்களிடம் ஏராளமான ஆண்கள் பெண்கள் பதாகைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். இதனை தொடர்ந்து ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்