Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாய்களிடமிருந்து புள்ளிமானை மீட்ட பொதுமக்கள்

ஜனவரி 12, 2021 12:08

ராமநாதபுரம் : திருவாடானை அருகே கிராமத்துக்குள் புகுந்த புள்ளி மானை நாய்களிடமிருந்து கிராம மக்கள் பத்திரமாக மீட்டு தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள  குஞ்சங்குளம் கீழ குடியிருப்பில் இன்று  புகுந்த புள்ளிமானை நாய்கள் துரத்தி கடிக்க முற்பட்டபோது கிராம மக்கள்  மீட்டனர்.

அதன் பின்னர் வனச்சரக வேட்டை தடுப்பு காவலர்கள் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வரவில்லை. திருவாடானை பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில்  உள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் பணி செய்கிறார்கள் என்று பார்த்தால் செய்வதாக தெரியவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புள்ளி மான் பிடிக்கப்பட்டு  தகவல் தெரிவித்து பல மணி நேரமாகியும் யாரும் வரவே இல்லை. புள்ளிமான் இருப்பது பற்றி திருவாடனை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்கள் கடைசியில் கிராம மக்கள் திருவாடானை தீயணைப்பு நிலைய  அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

காயம்பட்ட மானிற்கு  சிகிச்சை செய்ய கால்நடைமருத்துவருக்கு தகவல்தெரிவித்து அவர் தாமதமாக  வந்து சிகிச்சைக்குப்பின் புள்ளி மானை தீயணைப்புத் துறையினர் உயிருடன் பத்திரமாக  காட்டில் விட்டனர். எனவே மாவட்ட நிர்வாகம் திருவாடானை பகுதிகளில் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்கள் எண்களை ஆங்காங்கே இறுதி அறிவிப்பு பலகையில் வைக்க  வேண்டும் எனவும் அதேபோல் கால்நடை மருத்துவர் தாமதமாக வந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்