Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நதியில்  மூழ்கிய வாலிபர்  மூன்று நாட்களுக்கு பின் பிணமாக மீட்பு

ஜனவரி 12, 2021 12:09

திருநெல்வேலி : கடனாநதியில்,   மூழ்கிய வாலிபர்  மூன்று நாட்களுக்கு பிறகு, பிணமாக மீட்கப்பட்டார். திருநெல்வேலி  மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா ஆழ்வார் குறிச்சி,  அருகிலுள்ள கீழ ஆம்பூர் துர்க்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த, பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் ஆனந்த்ராஜ்  ( வயது.24)  இவர், விக்கிரம சிங்கபுரத்தில் உள்ள, தனியார் நிறுவனத்தில், ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9- ஆம் தேதி மாலையில்,  தன்னுடைய  சித்தப்பா கணேசன்,  அவரது மகன் முத்து ஆகியோருடன்,  ஆம்பூர் அருகேயுள்ள  கடனாநதிக்கு, குளிக்கச் சென்றார்.

ஆற்றில் ஆனந்த ராஜூவும், முத்துவும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில், திடீரென  தண்ணீர் சற்று கூடுதலாக வந்ததால், வெள்ளத்தில் ஆனந்த்ராஜூம்,  முத்துவும், தண்ணீரில்   இழுத்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்த, கரையில் நின்று கொண்டிருந்த  கணேசன்,  விரைந்து சென்று, அவர்களைக் காப்பாற்ற முயன்றார்.

முத்துவைக் காப்பாற்றி, கரைக்குக் கொண்டு வந்த கணேசன், ஆனந்த்ராஜூவையும் காப்பாற்றுவதற்காக செல்வதற்குள், ஆனந்த்ராஜ், தண்ணீரில் மூழ்கி மாயமானார். இது குறித்து,  தகவல் அறிந்ததும்,  அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன், ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுடலை வேல் ஆகிய இருவரும், தங்களுடைய  நிலைய தீயணைப்பு  மீட்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,  ஆனந்த்ராஜை, கடந்த இரு நாட்களாக தேடிவந்தனர்.

இந்நிலையில்,  இன்று (ஜனவரி.11) காலையில், ஆனந்தராஜின் உடல்,  அவர் குளித்த இடத்தில்  இருந்து,  சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில்,  ஒரு செடி மறைவில்,  மாட்டி இருந்தது.  இதனைக் கண்ட, தீயணைப்புத்துறை வீரர்கள்  ஆனந்தராஜின் உடலை மீட்டு, கரைக்குக் கொண்டு வந்தனர்.அதன் பின்னர், உடற்கூறு ஆய்வுக்காக, அதனை திருநெல்வேலி  அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்