Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

ஜனவரி 12, 2021 12:14

நாகை : வேதாரண்யத்தில் மாற்றுத்திறானாளிகள்  நலத்துறை சார்பில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமில் 131 பயனாளிகளுக்கு 16 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்  மதிப்பிலான உபகரணங்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் மாற்றுத்திறானாளிகள்  நலத்துறை சார்பில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமில் 131 பயனாளிகளுக்கு 16 லட்சத்து 64 ஆயிரத்து 777 ரூபாய்  மதிப்பிலான உதவி உபகரணங்களை  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், ஒன்றியக் குழுத் தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், தாசில்தார் முருகு, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்