Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுகதான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும் - பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி

ஜனவரி 13, 2021 10:47

திருச்சி  : தமிழகத்தில் அதிமுகதான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி திருச்சியில் தெரிவித்தார்.பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி திருச்சி மலைக்கோட்டை  தாயுமானவர் சுவாமி கோயிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்தார். இதனையடுத்து

செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியை பொருத்தவரை, பெரும்பான்மை கட்சியான அதிமுகதான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும் என்று   தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாஜக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார், துணைத் தலைவர் பாலமுருகன், மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் சுதாகர் என்கிற வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்