Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மன நலம் பாதிக்கப்பட்ட நபர்களோடு பொங்கல் விழா கொண்டாட்டம்

ஜனவரி 13, 2021 10:48

பெரம்பலூர் : மன நலம் பாதிக்கப்பட்ட நபர்களோடு கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் பொங்கல் விழா கொண்டாடினர். பெரம்பலூரில் உள்ள வேலா கருணை இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 90 நபர்கள் தங்கி உள்ளனர்.

இதனிடையே தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் மற்றும் டான்  அறக்கட்டளையின் சார்பில் பொங்கல் விழா கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் , கல்வி நிறுவனங்களின் செயலர்  டாக்டர் C. மித்ரா அவர்களின் முன்னிலையில் பொங்கல் விழா நடைபெற்றது.

  நன்கு படித்து நல்ல நிலையில் வாழ்ந்தவர்கள் சூழ்நிலை காரணமாக மன நிலை பாதிக்கப்பட்டு குடும்பத்தை பிரிந்து கருணை இல்லத்தில் தங்கி இருக்கும் இவர்களோடு நாங்கரும் உங்கள்  உறவுதான் - என்ற உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

அனைவரையும் மகிழ்விக்கும் பொருட்டு பல்வேறு கலை போட்டிகள் நடத்தப்பட்டு , பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் வைத்து வெகு விமர்சையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அமராவதி, ரங்கராஜ், மற்றும் ஆசிரியர்கள் கார்மேகம், மோகன்ராஜ், கீதாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்