Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பயிர்களுக்கும், உரிய இழப்பீட்டு தொகை நிச்சயம் வழங்கப்படும்

ஜனவரி 15, 2021 08:04

திருநெல்வேலி: மழை, வெள்ளம் தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், நேற்று (ஜனவரி.14) பொங்கல் மாலையில் நடைபெற்ற, ஆய்வு கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக பேரிடர் மேலாண்மைமற்றும் வருவாய் துறை அமைச்சர் .உதயகுமார் கூறியதாவது:- 

"திருநெல்வேலி மாவட்டத்தில்,  அணைகளில் இருந்து வெளியேற்றப்படும், உபரி நீரின் அளவு, வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இம்மாவட்டத்திற்கு அபாயகரமான சூழல்கள், எதுவும் இல்லை! என்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் பாபனாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகள் முழுமையாக நிரம்பிய நிலையில், அவற்றின் உபரிநீரானது வினாடிக்கு ஐம்பதாயிரம் கன அடிக்கு மேல், வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால்,  தாமிரபரணி ஆற்றில், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன்,   விளைநிலங்கள் , குடியிருப்புபகுதிகள் ஆகியவற்றிலும், வெள்ள நீர் புகுந்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த கனமழை காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில்,  பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்தும்,  தென்காசி மாவட்டத்தில்,  கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்தும் திறக்கப்பட்ட  உபரி நீரால் தான், தாமிரபரணி நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின் பேரில், இரவு-பகலாக, மாவட்ட ஆட்சியர், காவல்துறை  கண்காணிப்பாளர்கள், இம்மாவட்டங்களின் அமைச்சர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள், மீட்பு மற்றும் நிவாரண  பணிகளில், ஈடுபட்டு வருகின்றனர். 

பண்டிகை காலம் என்றும் கூட பார்க்காமல், களத்தில் இறங்கி, வேலை செய்து வரும்,  அதிகாரிகளுக்கும், மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள். தாமிரபரணி நதியில், வினாடிக்கு  அறுபதாயிரம் கன அடி உபரிநீர் சென்றாலும்,  பாதிப்பு இல்லாத நிலையே இருக்கும். மழை வெள்ளத்தால், திருநெல்வேலி   மாவட்டத்தில், அபாய சூழல்கள், எதுவும் இல்லை! என்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது,  தாமிரபரணி நதியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு, வினாடிக்கு  இருபத்தி மூவாயிரம் கன அடியாக, குறைக்கப்பட்டுள்ளது. மலை பகுதிகளில் மழை அளவு, வெகுவாக குறைந்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது! என்று, அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்தார்.

மேலும், அவர் கூறுகையில்,"இம்மாவட்டத்தில், தற்காலிக  முகாம்களில்,தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவதுடன்,   கொரோனா தொடர்பான,  பரிசோதனையும், நடத்தப்பட்டு வருகிறது. தேசிய மற்றும்  மாநில  பேரிடர் மீட்புக்குழுக்களை சேர்ந்த வீரர்களும், கடற்படை வீரர்களும், இங்கு  பணியில் இருந்து வருகின்றனர். மாநிலம் முழுவதிலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள, பயிர்ச்சேத விபரங்கள் கவலை அளிப்பதாக உள்ளன. திருநெல்வேலி, தென்காசி,  தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில், கனமழையால் விவசாயிகள் பெரிய அளவில், பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர் சேத விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.அவற்றை  கணக்கீடு செய்து, உரிய இழப்பீடுகள் வழங்கிட, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

நெல்லை மாவட்டத்தில், ட்ரொன் மூலம், விவசாய நிலங்களில்,  பாதிப்புகள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.  தாமிரபரணி நதியில் இருந்து, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு,  தண்ணீர் வழங்கப்பட்டுவருகிறது. தற்போது பெய்துள்ள கனமழையினால்,  வெள்ளநீரில்,  குடி நீர் உறை கிணறுகள் மூழ்கியுள்ளன. அதனால், இம்மாவட்டங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்திலும், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு  மாற்று நடவடிக்கைகள் எடுத்து,  உள்ளூர் நீர்ஆதாரங்கள் மூலம், குடிநீர் கிடைத்திட, நடவடிக்கைகள் எடுத்திடுமாறு, அந்ததந்த மாவட்டங்களின் ஆட்சிதலைவர்களுக்கு அறிவுருகள் வழங்கப்பட்டுள்ளன. 

உள்ளாட்சி துறை அமைச்சர் கவனத்திற்கு, வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட குடிநீர் பிரச்சனைகள், கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதன்பேரிலும்,  உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழகம் முழுதும் மழைமானிகளை  அதிகரித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை உள்ளிட்ட மலை கிராமங்களில்  உள்ள மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும், எடுக்கப்பட்டுள்ளன!" என்றும் குறிப்பிட்டார் .

தலைப்புச்செய்திகள்