Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி:உலகின் மிகப்பெரிய கொரானா தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்தார் 

ஜனவரி 16, 2021 09:49

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய மருந்துகளின் பல்வேறு கட்ட வெற்றிகரமான பரிசோதனைக்கு பின், இந்த தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 9-ந் தேதி உயர்மட்ட குழுவினருடன் ஆய்வு செய்தார்.

அதன் பின், ஜனவரி 16-ந் தேதி (இன்று) முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. முதல்கட்டமாக, சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிற முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும். அடுத்ததாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கு போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.  

அதன்படி, உலகிலேயே மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா இன்று தொடங்கியது. இந்த மாபெரும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.  நாடு முழுவதும் உள்ள 3006 மையங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெறுகிறது. தமிழத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நாடு முழுவதும் முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மையத்திலும் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை படிப்படியாக மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
 

தலைப்புச்செய்திகள்