Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓசூர் பேரண்டப்பள்ளி அருகே லாரி மோதி ஒற்றை காட்டு யானை படுகாயம்

ஜனவரி 16, 2021 11:43

ஓசூர் : ஓசூர் சானமாவு வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக 70க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்  பல குழுக்களாக பிரிந்து சாணமாவு, போடுர், பேரண்டப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தஞ்சமடைந்து உள்ளது. இதில் சில யானைகள் தனித்தனியாகவும் தஞ்சமடைந்து உள்ளது.

இந்நிலையில் பேரண்டபள்ளி வனப்பகுதியில் தஞ்சமடைந்திருந்த ஒற்றை காட்டு யானை  இரவு  பெங்களூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடந்து போடுர் வனப்பகுதிக்கு செல்ல முயன்ற போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி  யானைமீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யானை படுகாயங்களுடன் உயிருக்கு போராடியது.  தகவலறிந்து  வந்த  வனத்துறையினர் யானை மீது தண்ணீரை பீச்சு அடித்தனர்.  அப்போதும்   யானை எழுந்திருக்க முடியாமல் தவித்து வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர் பிரகாஷ் யானைக்கு மயக்க மருந்து செலுத்தி, முதலுதவி சிகிச்சை அளித்தார்.

பின்னர்  யானை மெல்லமெல்ல மயக்க நிலைக்கு திரும்பிய போது யானையை கட்டி கிரேன் மூலம் தூக்கி வனத்துறை லாரியில் ஏற்பட்டது. பிறகு அந்த யானையை தேன்கனிக்கோட்டை அடுத்த உள்ள அய்யூர் வனப்பகுதியில் உள்ள வனதுறை பங்களாவிற்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து காரணமாக பெங்களூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்