Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவிற்கு அதிரடி ஹெலிகாப்டர்: அமெரிக்கா

ஏப்ரல் 04, 2019 07:30

வாஷிங்டன்: நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் அதிநவீன எம்எச் - 60ஆர் ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு வழங்க உள்ள 24 ஹெலிகாப்டர்களின் விலை ரூ.17,861 கோடி.  
இந்த ஹெலிகாப்டரில் கண்காணிப்பு சென்சார்கள், தொலைதொடர்பு சாதனங்கள் ஆயுதங்கள் உள்ளிட்டவை இருக்கும். 

இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில், 24 எம்எச் 60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை இணைப்பதன் மூலம், இந்திய பாதுகாப்பு படையின் வான் தாக்குதல், நீர்மூழ்கிகளுக்கு எதிரான தாக்குதல் திறன் அதிகரிக்கும்.  
அமெரிக்கா- இந்திய உறவை வலுப்படுத்த உதவும் வகையில், அமெரிக்க அரசின் வெளியுறவு மற்றும் தேச பாதுகாப்பு கொள்கை அடிப்படையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.  
இந்த ஹெலிகாப்டரால், வானில் உள்ள இலக்கை தாக்கவும், கடலுக்கடியில் செல்லும் நீர்மூழ்கியை கண்டுபிடித்து தாக்கி அழிக்கவும் முடியும். கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு பணி போன்றவற்றில் ஈடுபடவும் முடியும்.  

தற்போது, இந்திய கடற்படையில் பிரிட்டன் தயாரிப்பான ஷீகிங் ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய பெருங்கடல் பகுதியில் சமீப காலமாக சீன கடற்படை ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவிடம் வாங்க உள்ள எம்எச் - 60 ஆர் ஹெலிகாப்டர்கள் மூலம் இந்திய கடற்படையின் பலம் அதிகரிக்கும் என தெரிகிறது. 





















 

தலைப்புச்செய்திகள்