Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூத்துக்குடியில் சூழ்ந்துள்ள நீரை அகற்றாவிட்டால் மாபெரும் போராட்டம் - இயக்குனர் கௌதமன்

ஜனவரி 17, 2021 10:09

தூத்துக்குடி : பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை போர்க்கால  அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் குடியரசு தினம் அன்று மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் இயக்குனர் கௌதமன் தூத்துக்குடியில் தெரிவித்தார்.  தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாக தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து 
வருகின்றனர்.  

இந்த நிலையில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ராம் நகர், வீட்டுவசதி குடியிருப்பு, உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை இயக்குனர் கௌதமன் இன்று பார்வையிட்டார்.   பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது தூத்துக்குடி நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது. ஒரு கடலுக்குள் ஒரு நகரம் இருந்தால் எப்படி இருக்குமோ அதே போல் காட்சி அளிக்கிறது.  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை தண்ணீரில் மக்கள் தவிக்கிற தவிப்பு  ஆளுகின்ற மத்திய மாநில அரசு  தெரிந்தும் பாராமுகமாக உள்ளனர் என குற்றம்சாட்டினார்.  திரும்பிய திசையெல்லாம் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது. குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது என தெரிவித்த அவர்  மழைநீரை அகற்ற சில இடங்களில் எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அந்த இயந்திரம் இயங்கவில்லை அதே போல் தான் இந்த அரசும் இயங்கவில்லை என தெரிவித்த கௌதமன்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என தெரிவித்தார்.  இந்த கழிவுநீர் அகற்ற நிரந்தர கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் மேலும் இந்த மழை நீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் குடியரசு தினத்தன்று  மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும்  மழை வெள்ளத்தால்   பயிர்கள் அனைத்தும் அழகி  விவசாயிகள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.   பாதிக்கப்பட்ட விளைநிலங்களை உடனே கணக்கெடுத்து முழுமையான விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

தலைப்புச்செய்திகள்