Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெள்ளப்பெருக்கால் சேதம் அடைந்த மேலப்பாளையம் பாலம் மீண்டும் திறப்பு 

ஜனவரி 17, 2021 10:12

திருநெல்வேலி : வெள்ளப்பெருக்கால் சேதம் அடைந்த மேலப்பாளையம் பாலம் ஐந்து நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில் இருந்து, திருநெல்வேலி டவுணுக்கு செல்லும், பிரதான சாலையில், மேலநத்தம் பகுதியில்  அமைந்துள்ள  தரைவழிப்பாலம், கடந்த ஒரு வாரகாலமாக, இம்மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, வெள்ளத்தில் மூழ்கியது.

இந்த பாலத்தின் மேல், சுமார் எட்டடி உயரத்துக்கு தண்ணீரும் சென்று  கொண்டிருந்தது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, இந்த பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

தற்பொழுது  மழை குறைந்து, வெள்ளம் வடிந்து விட்டதையடுத்து,  இந்த  பாலத்தில், வெள்ளத்தின் போது, இழுத்து வரப்பட்ட மரக்கிளைகள், குப்பைக்கூளங்கள் போன்றவை, பணியாட்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மூலமாக, பொதுப்பணித்துறை,  தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களின், மேற்பார்வையில்  அப்புறப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அதிகாலை முதல், மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருப்பதாக, நெல்லை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்