Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுரை

ஜனவரி 19, 2021 09:09

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளும், கொரோனா தொற்று தடுப்புக்கான,அரசு விதிமுறைகளை பின்பற்றிட, மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்  பள்ளிகளை  இன்று (ஜனவரி.19) முதல், திறந்து நடத்திட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள, 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் மட்டுமே தற்பொழுது அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என, மொத்தம் 312 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  முன்னதாக உள்ளாட்சி அமைப்புகளின், தூய்மைப்  பணியாளர்கள் மூலம்,ஒவ்வொரு பள்ளியிலும், பள்ளி வளாகங்கள், அலுவலக கட்டிடங்கள், ஆசிரியர்கள் ஓய்வறைகள், மாணவ, மாணவிகளுக்கான வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள்,

நூலகங்கள், நீர் அருந்தும் இடங்கள், உணவு சாப்பிடும் இடங்கள் மற்றும் கழிவறைகள் போன்றவற்றில், குப்பைக்கூளங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.அனைத்து இடங்களிலும் கிருமி  நாசினிகள் தெளிக்கப்பட்டன. கைகழுவுதல், முகக்கவசங்கள் அணிதல், சமூக இடைவெளிகளைப் பேணுதல் உள்ளிட்ட, கொரோனா தொற்று தடுப்புக்கான, அரசு விதிமுறைகளை பின்பற்றிட,  எல்லாப் பள்ளிகளுக்கும்  திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், அறிவுரை வழங்கியுள்ளது.

தலைப்புச்செய்திகள்