Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திரைப்பட வசூல் என்பது மிகைப்படுத்தப்பட்டது - அமைச்சர் பாண்டியராஜன்

ஜனவரி 20, 2021 09:03

சென்னை : திரைப்படம் ஹிட் என காண்பிக்க வசூல் மிகைப்படுத்தி காட்டப்படுகிறது என மாஸ்டர் திரைப்பட வசூல் குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மறைமுக கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை ஆவடி தொகுதிக்குற்பட்ட திருநின்றவூர் பெரியார் நகர், திருமுருகன் நகர், சக்திவேலன் நகர்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 6 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகளுளுக்கு

அமைச்சர் பாண்டியராஜன் அடிக்கல் நாட்டி  துவக்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திரையரங்குகள் பெரும்பாலும் முழு இருக்கையுடன் இயங்கவில்லை, திரைப்படங்கள்  வெற்றி பெற்றது என காண்பிப்பதற்காக 2 கோடி வசூல் வந்தாலும் 20 கோடி என கூறுவது இயல்பு என மாஸ்டர் திரைப்பட வசூல் குறித்த கேள்விக்கு அமைச்சர் மறைமுகமாக பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் மத்திய அரசிடம் தமிழகத்தின் உரிமைகளுக்காக மோடி அமித்ஷாவை முதல்வர் சந்தித்துள்ளார். யாருக்கும் பயப்பட வேண்டிய தேவை முதல்வருக்கு இல்லை, முதல்வர்  பாதுகாப்பு இல்லாத ஒருவர், ஜெயலலிதா மற்றும் நாங்கள் செய்த நலத்திட்டங்கள் எங்களுக்கு பாதுகாப்பாக உள்ளது என கூறினார்.

2ஜி  வழக்கு விரைவாக நடைபெறுவதால் மத்திய பாஜக அரசை  விமர்சிக்காமல் அதிமுகவை ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். கொரோனா தடுப்பூசி குறித்து காங்கிரஸ் கூறிவரும் கருத்துகள் தேச துரோக செயலாகும், கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ராகுல்

மற்றும் ஸ்டாலினின் அரசியல் மிகப்பெரும் விலையை தரவேண்டி இருக்கும்என தெரிவித்தார். அதிமுக கூட்டணி பலமாக உள்ளது திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதா என்பதுகூட தெரியவில்லை எங்கள் கூட்டணி சுயமரியாதை உள்ள கூட்டணி என பெருமை தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்