Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு  போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள்

ஜனவரி 20, 2021 09:11

திருச்சி : தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தை இரண்டாம் தேதி திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு தொடர்  மழை காரணமாக போட்டி தள்ளி வைக்கப்பட்டது. அதனித்தொடர்ந்து  ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் 450 மாடுபிடி வீரர்களும் 550 காளைகள் பங்கேற்கற்றனர்.

திருச்சி  வருவாய் கோட்டாச்சியர் விஸ்வநாதன் உறுதிமொழி வாசிக்க , முன்னாள் எம்.பியும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான  ப.குமார் கொடியசைத்து  தொடங்கிவைத்தார்.

போட்டியில் முதலாவதாக  கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து காளைகளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.  இதில்  ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு போட்டியை கண்டு ரசித்தனர்.

தலைப்புச்செய்திகள்