Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாவோயிஸ்டுகளை விட மிக ஆபத்தானது பா.ஜனதா - மம்தா கடும் தாக்கு

ஜனவரி 20, 2021 11:16

கொல்கத்தா: மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 3 மாதங்களில் நடைபெற உள்ளதால், அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று புருலியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அதில் அவர் பேசியதாவது: அரசியல் என்பது புனிதமான சித்தாந்தம் சம்பந்தப்பட்டது. ஆடையை மாற்றுவதுபோல், அதை தினந்தோறும் மாற்றக்கூடாது. பா.ஜனதாவில் சேர விரும்புபவர்கள் வெளியேறலாம். ஆனால், நாங்கள் பா.ஜனதாவுக்கு தலைவணங்க மாட்டோம். ஏனென்றால், மாவோயிஸ்டுகளை விட மிகவும் ஆபத்தானது பா.ஜனதா. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, இந்த மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி மக்களை பொய் வாக்குறுதிகளை அளித்து பா.ஜனதா ஏமாற்றியது. இவ்வாறு அவர் பேசினார்
 

தலைப்புச்செய்திகள்