Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடிப்படை வசதி மற்றும்  சுகாதாரத்தை மேம்படுத்த  வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் மனு

ஜனவரி 21, 2021 09:00

திருச்சி : அடிப்படை வசதி மற்றும்  சுகாதாரத்தை மேம்படுத்த  வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு வழங்கினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி சார்பில் சி.ஐ டி.யு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் பகுதி குழு நிர்வாகி சரண்சிங் உள்ளிட்ட பலர் இன்று திருச்சி மாநகராட்சி ஆணையர்  சிவசுப்பிரமணியனை  சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் மாநகராட்சிக்குட்பட்ட 50 முதல் 60 வார்டு பகுதி முழுவதும் பல நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக சாலை  முழுவதும் சீர்குலைந்து போனது,   மேலும் பகுதியில் சுகாதார சீர் கேட்டின் காரணமாக கொசுத் தொல்லை நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உரிய சுகாதார நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும்,

மேலும், இப்பகுதியில்  மழை நீரால் சேதமான, சாலைகள் ஏற்படும் விபத்துகளை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

தலைப்புச்செய்திகள்