Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரியலூர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஜனவரி 21, 2021 09:13

அரியலூர் : 5,30,025 வாக்காளர்கள்- ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டனர். அரியலூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ரத்னா அரசியல்  கட்சியினர் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இதில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 12 வாக்காளர்கள் உள்ளதாகவும், ஜெயங்கொண்டம்  சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 13 வாக்காளர்கள் உள்ளதாகவும் குறிப்பிடபட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 25 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்து உள்ளார்.

இதில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்