Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீ செயலி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு விழா

ஜனவரி 22, 2021 11:40

திருவள்ளூர்  : பூந்தமல்லியில் தீயணைப்பு துறை சார்பில் தீ செயலி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. தீ விபத்துகள் ஏற்படும் இடங்களில் இருந்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிந்தவுடன் சம்பவம் நடந்த இடத்தை கண்டறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல  தாமதம் ஆவதால் தீ விபத்தில் அதிக அளவில் பொருட்சேதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், தீயணைப்பு துறை சார்பில் தீ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்த செயல்முறை விளக்கம் பூந்தமல்லி அடுத்த குமனன்சாவடியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களது செல்போன்களில் தீ செயலியை  பதிவு இறக்கம் செய்து அதை உபயோகிப்பது எப்படி தீ விபத்து ஏற்பட்டால் செயலி மூலம் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிப்பது எப்படி தீ விபத்து நடந்த இடத்தை  பதிவு செய்வது எப்படி என்பது குறித்த செயல்முறைகளை பூந்தமல்லி தீயணைப்பு அதிகாரி கோபால் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது செல்போன்களில் தீ செயலியை பதிவிறக்கம் செய்து அதனை உபயோகிப்பது எப்படி என்பது குறித்து கேட்டறிந்தனர். இதுகுறித்து செயல்முறை விளக்கமும் செய்து காட்டப்பட்டது.

தலைப்புச்செய்திகள்