Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ள பெரியகுளம் கண்மாய் , தண்ணீர் நிரம்பவிடாமல் தடுப்பதாகக் குற்றச்சாட்டு

ஜனவரி 22, 2021 11:43

தேனி  : குளத்தை ஆகிரமித்து விவசாயம் செய்பவர்கள் குளத்தின் முழு அளவு நீரை தேக்க விடாமல் மதகுகளை திறந்து நீரை வெளியேற்றி வருவதாக பெரியகுளம் கண்மாய் பாசன விவசாயிகள்  குற்றச்சாட்டு விடுத்துள்ளனர்.

குளத்தில் முழு அளவு நீரை தேக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தின் முக்கிய முகமாகவும் ஊரின் பெயரிலே உள்ளது பெரியகுளம் கண்மாய். 300 ஏகர் பரப்பளவு உள்ள இந்த பெரியகுளம் கண்மாயில் மூன்றில் 2 பங்கு  நீர் பிடிப்பு பகுதி அரசியல் செல்வாக்கு படைத்தவர்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிரமித்து மா, தென்னை, கரும்பு உள்ளிட்ட விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குளத்தின் முழு அளவு நீர் தேக்க முடியாத நிலையில் விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறையும், நிலத்தடி நீரும் குறைந்தது. இவ்வாண்டு வடகிழக்கு பருவ  மழை அதிக அளவில் பெய்து அனைத்து கண்மாய், குளங்களும் நிறைந்தது. அதே போல் பெரியகுளம் கண்மாய் நிறைய வேண்டிய நிலையில் அதன் முழு அளவை எட்ட விடாமல் குளத்தை ஆகிரமித்து

விவசாயம் செய்துள்ள ஆக்கிரமிப்பாளர்கள் மதகுகளை திறந்து நீரை வெளியேற்றி வருவதால் பெரியகுளம் கண்மாய் அதன் முழு அளவை ஏட்டாமல் உள்ளது என பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து பெரியகுளம் கண்மாயில் உள்ள ஆகிரமிப்பை அகற்றி கண்மாயை தூர்வாரி கண்மாயின் முழு அளவு  நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்மாய் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்