Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலியில் தேசிய வாக்காளர் தினம்! தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற கவிஞர் பேரா பங்கேற்பு!

ஜனவரி 22, 2021 11:45

திருநெல்வேலி :  நாடுமுழுவதும், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 25-ஆம் தேதி, தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம், 1950-ஆம் ஆண்டு, ஜனவரி  25-ஆம் தேதி அமைக்கப்பட்டதை, நினைவுறுத்திடும் வகையில் தேசிய வாக்காளர் தினம், நமது நாட்டில் 2011- ஆம் ஆண்டு முதல், நடைமுறையில் இருந்து  வருகிறது.

18 வயது நிரம்பிய  ஒவ்வொருவரும், வாக்களிப்பதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்ட  இளம் வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காகவும்,   வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை  ஒவ்வொருவருக்கும் உணர்த்திடு வதற்காகவும், அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திடவும், தேசிய வாக்காளர் தினம் பின்பற்றப்படுகிறது.

அதன் அடிப்படையில், திருநெல்வேலி பழையபேட்டை காந்தி நகர் பகுதியில் உள்ள, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில், 11-ஆவது தேசிய வாக்காளர் தினம்  காலையில், கொண்டாடப்பட்டது.  திருநெல்வேலி உதவி ஆட்சியர் (பயிற்சி) பி.அலர்மேலு மங்கை தலைமை வகித்தார்.

கல்லூரி முதல்வர் எஸ்.மைதிலி அனைவரையும் வரவேற்றும் பேசினார். திருநெல்வேலி பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றவருமான கவிஞர்  பேரா  என்ற பே.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, "வாக்களிக்க வேண்டியதின் அவசியம், வாக்குரிமையின் முக்கியத்துவம், யாரையெல்லாம் ஆட்சியாளர்களாக தேர்வு செய்ய வேண்டும்?

போன்றவை குறித்து, எடுத்துரைத்தார். வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்ற, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, வாழ்த்தினார். நிகழ்ச்சியின் முடிவில், தமிழ்த்துறை பேராசிரியை இரா.உமா தேவி நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்