Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலியில் 27% அளவுக்கு சாலை விபத்துக்கள் குறைப்பட்டுள்ளது - எஸ்.பி தகவல்

ஜனவரி 22, 2021 11:47

திருநெல்வேலி : 27 சதவிகிதம் அளவுக்கு, சாலை விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளதாக   திருநெல்வேலியில் நடைபெற்ற,  சாலைப் பாதுகாப்பு மாத விழாவில்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் திருநெல்வேலி வட்டாரப்  போக்குவரத்து அலுவலகம் ஆகியன இணைந்து, திருநெல்வேலி  மாவட்டத்தில்,  சாலைப் பாதுகாப்பு மாத விழாவை,  கடந்த  18-ம் தேதி முதல், நடத்தி வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக பெண் போலீசார்  பங்கேற்ற, சாலைப்பாதுகாப்பு  விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி திருநெல்வேலியில் நடைபெற்றது.

மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இருந்து தொடங்கிய, இந்தப்  பேரணியில், பெண் போலீசார்  100  பேர், ஹெல்மெட் அணிந்தபடி, இருசக்கர வாகனங்களில், பேரணியாக வந்தனர். மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், பச்சைக்கொடி  கொடி அசைத்து, இந்த இருசக்கர  பேரணியைத்  துவக்கி வைத்தார்.

முன்னீர் பள்ளம் வரை சென்ற, இந்தப் பேரணியின் போது,  வழிநெடுகிலும், பெண் போலீசார்,  இருசக்கரவாகன பயணத்தின் போது,  ஹெல்மெட் அணிவதின் அவசியம் மற்றும் சாலை விதிகள் உள்ளிட்ட, பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள்  குறித்து,  பொதுமக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்திய வண்ணம் சென்றனர்.

இதுகுறித்து,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மணிவண்ணன்   கூறுகையில், "சாலை பாதுகாப்பு மாத விழா ஜன.18 முதல் பிப்.17 வரை, ஒரு மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி, ஒவ்வொரு  நாளும், ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி இன்று பெண் போலீசாரைக் கொண்டு, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில்,  38 சதவீதம் அளவுக்கு, சாலை விபத்துகள்  குறைக்கப்பட்டு, அதற்காக மத்திய அரசிடம் இருந்து, பாராட்டு  விருதும் கிடைத்துள்ளது. சாலை விபத்துக்களை, இன்னும் அதிகம் குறைத்திடும் நோக்கத்திலேயே,  இதுபோன்ற நிகழ்ச்சிகளை  மாவட்ட காவல்துறை நடத்தி வருகிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை,  2019-ஆம் ஆண்டை விட, 2020- ஆம் ஆண்டில், சாலைவிபத்துக்கள், பெருமளவில்  குறைக்கபட்டுள்ளன.  2020- ஆம் ஆண்டில் இம்மாவட்டத்தில், சாலை விபத்துக்களினால், மொத்தம் 56 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.   அதேபோல், விபத்துக்களின் எண்ணிக்கையும்,  27 சதவிகிதம் அளவுக்கு,   குறைந்துள்ளது.

பொதுமக்கள்  ஒத்துழைப்பு கொடுத்தால், சாலைப்பாதுகாப்பு பணிகளில்,  இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் குறிப்பிட்டார். திருநெல்வேலி : 27 சதவிகிதம் அளவுக்கு, சாலை விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளதாக   திருநெல்வேலியில் நடைபெற்ற,  சாலைப் பாதுகாப்பு மாத விழாவில்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் திருநெல்வேலி வட்டாரப்  போக்குவரத்து அலுவலகம் ஆகியன இணைந்து, திருநெல்வேலி  மாவட்டத்தில்,  சாலைப் பாதுகாப்பு மாத விழாவை,  கடந்த

18-ம் தேதி முதல், நடத்தி வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக பெண் போலீசார்  பங்கேற்ற, சாலைப்பாதுகாப்பு  விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி திருநெல்வேலியில் நடைபெற்றது.

   மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இருந்து தொடங்கிய, இந்தப்  பேரணியில், பெண் போலீசார்  100  பேர், ஹெல்மெட் அணிந்தபடி, இருசக்கர வாகனங்களில், பேரணியாக வந்தனர். மாவட்ட

காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், பச்சைக்கொடி  கொடி அசைத்து, இந்த இருசக்கர  பேரணியைத்  துவக்கி வைத்தார். முன்னீர் பள்ளம் வரை சென்ற, இந்தப் பேரணியின் போது,

வழிநெடுகிலும், பெண் போலீசார்,  இருசக்கரவாகன பயணத்தின் போது,  ஹெல்மெட் அணிவதின் அவசியம் மற்றும் சாலை விதிகள் உள்ளிட்ட, பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள்  குறித்து,  பொதுமக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்திய வண்ணம் சென்றனர்.

இதுகுறித்து,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மணிவண்ணன்   கூறுகையில், "சாலை பாதுகாப்பு மாத விழா ஜன.18 முதல் பிப்.17 வரை, ஒரு மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி, ஒவ்வொரு

நாளும், ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி இன்று பெண் போலீசாரைக் கொண்டு, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில்,  38 சதவீதம் அளவுக்கு, சாலை விபத்துகள்

குறைக்கப்பட்டு, அதற்காக மத்திய அரசிடம் இருந்து, பாராட்டு  விருதும் கிடைத்துள்ளது. சாலை விபத்துக்களை, இன்னும் அதிகம் குறைத்திடும் நோக்கத்திலேயே,  இதுபோன்ற நிகழ்ச்சிகளை

மாவட்ட காவல்துறை நடத்தி வருகிறது.  திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை,  2019-ஆம் ஆண்டை விட, 2020- ஆம் ஆண்டில், சாலைவிபத்துக்கள், பெருமளவில்  குறைக்கபட்டுள்ளன.

2020- ஆம் ஆண்டில் இம்மாவட்டத்தில், சாலை விபத்துக்களினால், மொத்தம் 56 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.   அதேபோல், விபத்துக்களின் எண்ணிக்கையும்,  27 சதவிகிதம் அளவுக்கு, 

குறைந்துள்ளது. பொதுமக்கள்  ஒத்துழைப்பு கொடுத்தால், சாலைப்பாதுகாப்பு பணிகளில்,  இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் குறிப்பிட்டார்.

தலைப்புச்செய்திகள்