Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீரம் நிறுவனம் தீ விபத்து: உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் 

ஜனவரி 22, 2021 01:42

மும்பை: புனேயில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வரும் இந்திய சீரம் நிறுவன வளாகத்தில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஏற்பட்ட கட்டிடத்தின் 5-வது மாடியில் 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

அங்கு கட்டுமான பணிகள் நடந்து வந்ததும், பலியான 5 பேரும் கட்டுமான தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் இந்திய சீரம் நிறுவன தலைவரான ஆதர் பூனவாலா, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

எங்கள் சீரம் நிறுவன வளாகத்தில் நடந்த இந்த துயர சம்பவம் வேதனை அளிப்பதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்