Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு- முதலமைச்சர் கடும் தாக்கு

ஜனவரி 23, 2021 06:24

கோவை: தமிழக சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.  இந்நிலையில் இன்று காலை கோவை கோனியம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து கோவையில் அவர் பிரசாரத்தை தொடங்கினார். பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசுதான்
மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்லாமல் அதிமுகவை விமர்சிப்பதற்காகவே திமுக கிராம சபை கூட்டங்கள் நடத்துகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரசாரம் மக்களை திசை திருப்பும் நாடகம். 2011-ம் ஆண்டுக்கு பிறகு கோவை மாநகரம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்