Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா

ஜனவரி 23, 2021 09:48

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின்  124-ஆவது பிறந்த தினவிழா தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்றது.

இரண்டாம் உலகப் போரின்போது, வெளிநாடுகளில் போர்க்கைதிகளாக இருந்த, நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டி, இந்திய தேசிய ராணுவம் என்னும் போர்ப்படையை உருவாக்கி,  ஆங்கிலேயருக்கு எதிராக தாக்குதல் நடத்திய, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸின், 124- ஆவது பிறந்த தினவிழா, அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்கம் உட்பட, நாடெங்கிலும், வழக்கமான உற்சாகத்துடன், கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளையொட்டி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நெல்லை மாவட்டப்பிரிவு  சார்பில், மகாராஜநகர், ரெயில்வே சாலை அருகில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, நேதாஜியின் திருவுருவப்படத்திற்கு திருநெல்வேலி மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில், தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, மலர் தூவி, மலர்மாலைகள் அணிவித்து, வீரவணக்க மரியாதை  செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, பயனாளி ஒருவருக்கு,  தையல் இயந்திரம், அன்பளிப்பாக  வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. 

நிகழ்ச்சியின் முடிவில், நேதாஜியின் பிறந்த நாளான, ஜனவரி 23-ஆம் தேதியை, மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும், அரசு விடுமுறையாக அறிவித்திட வேண்டும் திருநெல்வேலி,  வேயந்தான் குளம் புதிய பேருந்து நிலையம் முன்பாக, தமிழக அரசு சார்பில்,  நேத்தாஜி மற்றும்  திருவள்ளுவர் ஆகியோரின்,  திருவுருவச் சிலைகளை, நிறுவ வேண்டும் ஆகிய இரண்டு  தீர்மானங்களும், ஒரு மனதாக  நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில், முத்துப்பாண்டி மாணவர் அணிச் செயலாளர் முத்துப்பாண்டி, தொண்டர் அணி செயலாளர் மணிமாறன், நல்லாசிரியர்  புலவர் ராமசாமி  மற்றும் கட்சி நிர்வாகிகள், சுரேஷ் பாண்டியன், சர்மிளா, கண்மணி லலிதா, சுபாஷ் பாண்டியன், அஜித்குமார், சிவசங்கர், பிரசாந்த், மணி, செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்