Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வேறு ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம்

ஏப்ரல் 04, 2019 03:49

சென்னை: பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்ட மன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல், பிரசாரம், செய்தியாளர்கள் சந்திப்பு என தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகின்றன. இதேப்போல் தேர்தல் ஆணையமும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:- 

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், காவல், வருமான வரி மற்றும் தேர்தல் அதிகாரிகளை சந்தித்தோம்.  பணப்பட்டுவாடா விவகாரத்தில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.  

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பொதுமக்களை இடையூறு செய்ய கூடாது எனவும் வலியுறுத்தின. தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. காவல், துணை ராணுவம் ஆகியன பாதுகாப்புக்கு தயார் நிலையில் உள்ளன. வெளியில் வர முடியாத அளவுக்கு கைது நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  

பூத் சிலிப் மூலம் வாக்களிக்க முடியாது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை 2 நாளில் வழங்கப்படும். பெண்கள் மட்டும் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் மக்களவை தொகுதிக்கு தலா ஒன்று அமைக்கப்படும்.  விடுபட்ட 4 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான முடிவு விரைவில் அறிவிக்கப்படும். மேலும் நமோ டிவி விவகாரம் குறித்து நாளை விசாரணை செய்யப்படும் என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்