Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோஷ்டி மோதலில் இளைஞர் வெட்டி படுகொலை

ஜனவரி 25, 2021 12:27

கடலூர் :குறிஞ்சிப்பாடி அருகே கோஷ்டி மோதலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவர் நேற்றையதினம் குறிஞ்சிப்பாடி ரயில்வே பேருந்து நிலையம் அருகே நடந்த கோஷ்டி மோதலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

குறிஞ்சிப்பாடியில் உள்ள திருமண மண்டபத்திற்கு நண்பரின் தங்கை திருமண விழாவிற்கு சென்ற பொழுது ஏற்பட்ட கோஷ்டி

மோதலில் தமிழரசன் கோஷ்டிக்கும் ராகுல்  கோஷ்டிக்கும் குறிஞ்சிப்பாடி ரயிலடி பேருந்து நிறுத்தத்தில் மோதல் நடந்துள்ளது.  இந்த மோதலில் ராகுல் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் தமிழரசனை கத்தியால் வெட்டியும், தலையில் கல்லால் தாக்கி விட்டும்  தப்பி ஓடி உள்ளனர்.

இதையடுத்து தமிழரசன் உடன் இருந்த  நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் அவரை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபொழுது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து தமிழரசனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழரசனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிய  குறிஞ்சிப்பாடி  நெல்லிக்குப்பம் பகுதியைச் சார்ந்த ராகுல் உள்ளிட்ட 7 பேரை குறிஞ்சிப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.

நள்ளிரவில் பொது  இடத்தில் இளைஞரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்