Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுக்கோட்டையில் தைப்பூச திருவிழா

ஜனவரி 25, 2021 12:37

புதுக்கோட்டை : தமிழ் கடவுளான முருகக் கடவுள் தண்டாயுதபாணி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மேல ராஜவீதியில்  உள்ள தண்டாயுதபாணி திருக்கோவிலில் முதலாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மேலராஜவீதியில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோவிலில் வரும் 28ஆம் தேதி தைப்பூச திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு தினமும் சிறப்பு யாகம் செய்யப்பட்டு மூலவர்  தண்டாயுதபாணிக்கு மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், இளநீர் போன்ற 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு யாகத்தின் புனித நீரும் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. உற்சவர் தண்டாயுதபாணியை ஆலயத்தின் உள்பிரகாரத்தில்  மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வலம் வந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.  பத்து நாட்களாக நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழா ஏழாம் நாளான நேற்று நடைபெற்ற ஆலய வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்