Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீர தீர செயல் பதக்கங்களை முதலமைச்சர் வழங்கினார்

ஜனவரி 26, 2021 06:36

சென்னை: காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதன்பின் முப்படை வீரர்கள், காவல் துறையினர் மற்றும் பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு கவர்னர் விழா மேடைக்கு சென்று அமர்ந்தார்.

பின்னர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி அணிவகுப்பு மேடைக்கு வந்து பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். வீரதீர செயல் புரிந்த 4 பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்கினார்.

இதேபோல் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும் விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். சிறந்த காவல் நிலையங்களுக்கான பதக்கங் களையும் வழங்கினார். விருதுகள் மற்றும் பதக்கங்களை பெற்றவர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அதன்பிறகு மோட்டார் சைக்கிளில் போலீசாரின் சாகச நிகழ்ச்சிகள் வரிசையாக நடத்தப்பட்டன. 44 போலீசார் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். பின்னர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பாரம்பரிய கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தமிழக அரசின் சாதனைகளை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. மொத்தம் 17 துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

வனயானைகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்ததற்காக கால்நடை மருத்துவர் பிரகாஷ், மாணவ-மாணவிகளின் உயிரை காப்பாற்றியதற்காக ராணிப்பேட்டை ஆசிரியை முல்லை, பனியிலும் சிறப்பாக ரெயிலை செலுத்தியதற்காக மதுரை ஓட்டுநர் சுரேஷ் ஆகியோர் முதல்வரிடம் இருந்து அண்ணா பதக்கத்தை பெற்றனர்.

தலைப்புச்செய்திகள்