Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்

ஜனவரி 26, 2021 09:05

லக்னோ: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். குடியரசு தினமான இன்று (செவ்வாய்க்கிழமை)  பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த உள்ளனர். இந்த நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்திய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதை மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

 ‘ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டெல்லியில் புதிய பாரம்பரியம் ஆரம்பிக்காமல் இருக்கவும், டெல்லி போலீசார் கருதுவது போல அசம்பாவிதங்கள் நடந்து
விடாமல் இருக்கவும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என
மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்துகிறது.' இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

தலைப்புச்செய்திகள்