Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்

ஜனவரி 26, 2021 09:36

திருநெல்வேலி : உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர், கொடி அசைத்து  துவக்கி வைத்தார்.திருநெல்வேலி,ஜன.25:- திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாது காப்பு பற்றிய விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்  திருநெல்வேலியில் மேற்கொள்ளப்பட்டது.மாவட்ட  ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, இந்த வாகனப்பிரச்சாரத்தை, பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  

இந்த வாகனத்தில் கல்லூரி மாணவிகள் தன்னார்வலராகக் கலந்து கொண்டு இம்மாவட்ட மக்களுக்கு, விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். நெல்லை மாநகரப்பகுதியிலும், புறநகர்ப்பகுதியிலும், ஆங்காங்கே உள்ள, கல்வி நிறுவனங்களில், இந்த வாகனத்தை நிறுத்தி, அந்தந்த பகுதி மக்களுக்கு, கலப்படம் தொடர்பான விழிப்புணர்வுகளை, கல்லூரி மாணவிகள் ஏற்படுத்தி வந்தனர்.

குறிப்பாக தேன், பால், மிளகு, காபி, டீ தூள்களில் எவ்வாறு கலப்படம் செய்யப்படுகிறது? அதனைக் கண்டறிவது எப்படி? போன்றவை குறித்து செயல்முறை விளக்கம் எல்லா இடங்களிலும்,  காண்பிக்கப்பட்டது. துவக்க விழா  நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர்   நவாஸ்கான், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் சந்திரபோஸ், ஆய்வாளர் சங்கரலிங்கம் உட்பட,  பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்