Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விதை சான்று அலுவலர்களுக்கான பயிற்சி

ஜனவரி 26, 2021 01:15

திருநெல்வேலி : அம்பாசமுத்திரத்தில் விதைச்சான்று அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி நடைபெற்றது. நெல்பயிரிடும் அனைத்து  விவசாயிகளுக்கும், தரமான வீரியம்மிக்க நெல்விதைகளை வழங்கி, அதன் மூலம் நெல் மகசூலை, அதிகரிக்கச் செய்திடுவதற்காக, திருநெல்வேலி மாவட்டம்,  அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் விதைச்சான்று அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி  நடைபெற்றது. 

விதைச் சான்று மற்றும் சான்றளிப்பு துறை சார்பில் நடைபெற்ற இந்த மண்டல அளவிலான பயிற்சியின் போது  விதைச்சான்று தொடர்பான நடைமுறைகள் குறித்து, சிறப்புப்பயிற்சிகள்  அளிக்கப்பட்டன. கோயமுத்தூர் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இணை இயக்குனர் ஆசீர் கனகராஜன், முதன்மைப் பயிற்சியாளராகப் பங்கேற்று, பயிற்சிகளை வழங்கினார்.

நெல்லை  விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் சுரேஷ், அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய தலைவர் ஆறுமுகசாமி, விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார்  ஆகியோரும், பயிற்சி வகுப்புகளை, நடத்தினர். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி  கன்னியாகுமரி மற்றும்  விருதுநகர் ஆகிய, ஐந்து  மாவட்டங்களிலும் இருந்து, விதைச்சான்று அலுவலர்கள் பங்கேற்று, பயிற்சி பெற்றனர்.

தலைப்புச்செய்திகள்