Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அவன் இவன் திரைப்படம் வழக்கு- நேரில் ஆஜரான இயக்குனர் பாலா

ஜனவரி 26, 2021 01:17

திருநெல்வேலி : அவன் இவன் திரைப்பட வழக்கு தொடர்பாக திரைப்பட இயக்குனர் பாலா திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதி மன்றத்தில் நேரில் ஆனார்.  திரைப்பட இயக்குநர் பாலா இயக்கத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த அவன், இவன் என்ற திரைப்படத்தில், திருநெல்வேலி மாவட்டம், பாபனாசம் அணைக்கு மேலே,  பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் குறித்து, சர்ச்சைக்குரிய காட்சிகள், இடம்பெற்றிருப்பதாகக் கூறி,

இங்குள்ள சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்த சங்கர் ஆத்மஜன் என்பவர், கடந்த 2011- ஆம் ஆண்டு, இயக்குநர் பாலா மீது, அம்பாசமுத்திரம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள,  குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை, நேற்று (ஜனவரி. 25) நடைபெற்றது. இதில், இயக்குநர் பாலா நேரில் ஆஜராகி, பதில் அளித்தார். அப்போது, விசாரணை நடத்திய நீதிபதி கார்த்திகேயனிடம், பாலா  கூறும்போது, பணம் பெறுவதற்காகவே புனையப்பட்ட பொய்வழக்கு இது என்று குறிப்பிட்டார்.

இதனை அடுத்து, இந்த வழக்கு விசாரணையை, அடுத்த மாதம்  பிப்ரவரி 8- ஆம் தேதிக்கு ஒத்தி  வைத்த நீதிபதி கார்த்திகேயன்  அன்று மீண்டும் ஆஜராகுமாறு, இயக்குநர் பாலாவுக்கு  உத்தரவும்,பிறப்பித்தார். இந்த வழக்கில், மனுதாரர் சங்கர் ஆத்மஜன் சார்பாக வழக்கறிஞர் ரமேசும், எதிர் மனுதாரர் இயக்குநர் பாலா சார்பாக, வழக்கறிஞர் முகம்மது உசேனும், ஆஜராகி இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்